முதலாம் தியோனீசியசு (அண். கி.மு. 432–367 ) என்பவர் பண்டைய கிரேக்க சர்வாதிகாரி ஆவார். இவர் சிசிலியில் உள்ள சிரக்கூசாவின் ஆட்சியாளராக இருந்தார். மேற்கு கிரேக்க குடியேற்றங்களில் சிரக்கூசா நகர அரசை மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக சிசிலியிலிருந்து இத்தாலி வரை பரவிய பேரரசாக மாற்றினார். இந்தப் பேரரசு பெயரளவில் ஒரு அரசியலமைப்பு உள்ள குடியரசாக இருந்தாலும், உண்மையில் இது முடியாட்சியாக இருந்த முதல் கிரேக்க பேரரசு ஆகும். இதில் தியோனீசியஸ் பேரரசர் அலெக்சாந்தருக்கும்அகஸ்டசின் சாதனைகளுக்கும் முன்மாதிரியாக இருந்தார். இவர் தனது வாழ்நாளில் தெய்வீக மரியாதைகளைப் பெற்ற முதல் கிரேக்க ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்து பிற்கால ஆட்சியாளர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்தார். இவர் மிக மோசமான, கொடூரமான, பழிவாங்கும் சர்வாதிகாரிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக பழங்காலத்தில் கருதப்பட்டார். மேலும்...
ஆரணி குப்புசாமி முதலியார் (1866-1925) தமிழ்ப் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். துப்பறியும் புதினங்கள் பலவற்றை எழுதியுள்ளார்.
டப்பாவாலா என்போர் இந்தியாவில் குறிப்பாக மும்பையில் அலுவலங்களில் பணி புரிவோரின் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவைப் பெற்று அவரவர்க்கு உரிய வகையில் உரிய நேரத்தில் வழங்கி காலி உணவு டப்பாக்களை மீண்டும் அவரவர் இல்லங்களில் வந்து சேர்க்கும் பணியைச் செய்யும் தொழிலாளர்கள் ஆவர்.
பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது, லினி காக்சு அமெரிக்காவிலிருந்து சோவியத் ஒன்றியத்திற்கு நீந்திச் சென்ற முதல் நபர் ஆனார்.
1948 இல் ஞானசௌந்தரி என்ற பெயரில் ஒரே கதையுடன் இரண்டு தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. ஜெமினியின் ஞானசௌந்தரி (படம்) படுதோல்வி அடைந்ததை அடுத்து அதன் பிரதிகள் அனைத்தையும் எஸ். எஸ். வாசன் எரித்து விட்டார்.
ஞா. ஸ்ரீதர் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளமீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 2017ல் மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி மூலம் விக்கிப்பீடியாவில் நுழைந்த ஸ்ரீதர் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம், பராமரிப்புப் பணிகளில் பங்களித்து வருகிறார். 2017-2018ம் ஆண்டு நடைப்பெற்ற வேங்கை திட்டப்போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். விக்கி திட்டங்களிலும் தொடர்ந்து தனது பங்களிப்புகளை நல்கி வருகிறார்.
அழகிகள் எனப்படுபவை பாபிலியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த பெரிய, வண்ணமயமான பட்டாம்பூச்சிகள் ஆகும். இவை 550-இற்கும் மேற்பட்ட இனங்களை உள்ளடக்கியது. பெரும்பாலானவை வெப்ப வலயத்தைச் சேர்ந்தவை என்றாலும், அழகிகள் அண்டார்டிகாவைத் தவிர அனைத்துக் கண்டங்களிலும் வாழ்கின்றன. இந்தக் குடும்பத்தில் உலகின் மிகப்பெரிய பட்டாம்பூச்சிகளான ஆர்னிதோப்டெரா இனத்தைச் சேர்ந்த பறவைச்சிறகிப்பேரினத்துப்பூச்சிகளும் அடங்கும். எசுப்பானிய பெசுத்தூன் என்றும் அழைக்கப்படும் செரிந்தியா ரூமினா பட்டாம்பூச்சி, எசுப்பானியாவின் எக்ஸ்ட்ரீமதுரா என்ற இடத்தில் இப்புகைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,77,226 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.